Sunday 11 January 2015

இந்தா பிடி இன்னும் 50 (கவிதைகள்)

By With No comments:


innum50cover
நூல்: இந்தா பிடி இன்னும் 50 (கவிதைகள்)
எழுதியவர்: பேயோன்
***
Android கருவிகள் / iPhone / iPad / Chrome / Firefox / கணினியில் படிக்க
கிண்டில் கருவிகள், செயலிகளில் படிக்க
பழைய கிண்டில், நூக் கருவிகளில் படிக்க

காதல் பிரசாரம்

By With No comments:

காதல் பிரசாரம்


Symbols-croped

காதல் பிரசாரம் – குறு நூல்
கவிஞர் கந்தசாமிக்குக் கவிதை என்றால் ரொம்பப் பிரியம். ஆனால் அவருக்கு வாய்த்தது, ஒரு செய்தித் தாளில் நிருபர் உத்தியோகம்.
தேர்தல் நேரத்தில் ஊரெல்லாம் சுற்றித் திரிந்து பிரசாரக் கூட்டங்களில் செய்தி சேகரித்தவர், மாலையில் வீடு திரும்பும் வழியில் காதலியைச் சந்திக்கிறார். அதே ஞாபகத்தில் வெண்பாக்களைப் பொழிகிறார்.
எலக்‌ஷன் ரிசல்ட் வருவதற்குள், அவருடைய காதலுக்குப் பச்சைக் கொடி காட்டப்படவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்!
என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.



ஆசிரியர் – என். சொக்கன்
அட்டைப் படம் – வடிவமைப்பு – மின்னூலாக்கம் – என். சொக்கன்,
வெளியீடு – முன்னேர் பதிப்பகம் &  FreeTamilEbooks.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
கிண்டில் கருவிகள், செயலிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க


புத்தக எண் – 46

ஒவ்வொரு வாசகனும் கவிஞனே!

By With No comments:

கா.பாலபாரதி

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

cover-online

அன்புநெஞ்சங்களுக்கு,
வணக்கம். முதலில், தங்கள்கைகளில் இந்தப் புத்தகம் உயிர் பெற்றிருப்பதற்கு, என் மனமார்ந்த நன்றிகள்.
ஒருவாசகனாக வலம்வந்த என்னை, திடீரெனக் கவிஞனாகப் பார்த்த நண்பர்களுக்கும்,
கவிதை படைக்கச் செய்த அன்பர்களுக்கும், அறிந்தும் அறியாமலும் என்னைத் தூண்டிய
அனைத்து நல்லுள்ளங்களுக்கும், பறந்து சென்ற தாள்களில் பரிதவித்த என் கவிதைகளுக்குத்,
தனிப்புத்தகத்தில் இளைப்பாற இடம் தந்த கனிவானவர்களுக்கும், உயர் அறிவை அள்ளித்தந்து
இவ்வுலகிற்கு என்னைக்காட்டிய அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும், பல ஆண்டுக் கனவு
இன்று உங்கள் விரல்கள் தீண்டப்பரிட்சயமானதற்கு உதவியாய் இருந்த அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றியுணர்வை அர்ப்பணிக்கின்றேன்.
புதுக்கவிதை அமைப்பிலேயே, எளியநடையில் தர விளைந்த எனது முயற்சியும்,
எனது கவிதை மொழியும் நிச்சயம் உங்கள் மனதைக் கவரும் என நம்புகிறேன்.
ஊனுடன்உயிர்தந்து, இவ்வுலகத்தைக் காட்டிய என் பெற்றோருக்கும், உயர்அறிவைப் பெறவழிதந்த
என் சகோதரருக்கும், இம்முதல் நூலை அர்ப்பணம் செய்வதில் பேரானந்தம் அடைகிறேன்.
ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும்
ஒரு வாசகன் இருக்கிறான்
ஒவ்வொரு வாசகனுக்குள்ளும்
ஒரு கவிஞன் இருக்கிறான்
உண்மையே ! இந்நூலின் ஒவ்வொரு வரிகளையும் , உங்களுள் ஒருவனாக , உங்கள் உணர்வுகளின்
கவிதைப் பிரதிநிதியாகவே எழுதியுள்ளேன் .
என்றும் உங்கள் பேராதரவுடன்
கா . பாலபாரதி
கா. பாலபாரதி எம்.ஏ (ஆங்கிலம்)., பி.எட்.
மின்னஞ்சல்: gandhiyameenal@gmail.com
கைபேசி: 9715329469
மின்னூலாக்கம் : லெனின் குருசாமி
மின்னஞ்சல் : guruleninn@gmail.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.


பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

ரதி வீதி

By With No comments:

 sss1

 ங்களுக்கு காதல் எந்த வடிவத்தில் இருந்தாலும் பிடிக்கும் என்றால் இப்பொழுதே வாசிக்க ஆரம்பியுங்கள் மாறாக காதல் என்றால் எழுத்து என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணம் உடையவர்களுக்கு இந்த மின்நூல் உகந்தது அல்ல . ஏனென்றால் இவை எழுதிப்பழகிக்கொண்டிருக்கும் ஒருவனின் சிதறல்கள் .இங்கே சிதறியிருப்பவை அனைத்தும் என் இதயக்கிடங்கிலிருந்து வார்த்தை வாளி வாயிலாக வாரியிறைத்தவையே . காதலால் பின்னிப்பிணைந்திருக்கும் இருவரின் உரையாடல்களாக இதைப்படிப்பீர்களானால் நிச்சயம் இம்மின்நூல் உங்களுக்கு புதிய உற்சாகம் தரும். இவற்றை வாசிக்கும் காதலர்களை, தம்பதியர்களை நிச்சயமாக இந்த மின்நூல் வசீகரிக்கும் . இம்மின்நூலைப்படிக்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுபவைதான் இவற்றிற்க்கு அணிந்துரைகள் . மேலும் இவை பெரும்பாலும் என்னுடைய இணையதளத்தில் நான் எழுதியவற்றின் கோர்வையான பக்கங்களே. இம்மின்நூலை வாசித்துவிட்டு நிறையோ குறையோ உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி
ப்ரியமுடன் வசந்த்

மின்நூல் வெளியீடு – www.freetamilebooks.com

என்னுடைய இணைய தளம் :
www.priyamudanvasanth.com
என்னுடைய மின்னஞ்சல் :
vasanth1717@gmail.com

Copyright © 2014 by Creative Commons Attribution-Non Commercial-No Derivs 3.0 Unported License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
ரதிவீதி
ஆசிரியர் : ப்ரியமுடன்வசந்த்

மின்னூலாக்கம் : ப்ரியமுடன் வசந்த்


பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க


புத்தக எண் – 37

நள்ளிரவும் கடலும் நானும்

By With No comments:
nalliravum-payon
ஆசிரியர் : பேயோன்
கவிதைகள்
வெகுஜன இலக்கியத்தில் கவிதைக்கான ஓர் வெற்றிடம் உள்ளது. சாதாரண இலக்கியத்தில் உரைநடையும் கவிதையும் இருப்பதற்கிணையாக வெகுஜன இலக்கியத்தில் உரைநடை உள்ளதே தவிர கவிதைக்கு இடமில்லாத நிலையே இருந்துவந்தது. பேயோனின் முந்தைய கவிதைத் தொகுப்பாகிய ‘காதல் இரவு’ இவ்வெற்றிடத்தினை ஓரளவு நிரப்பியது என்றே சொல்ல வேண்டும். எனினும் அதனை முழுவதுமாக நிரப்ப இன்னொரு தொகுப்பிற்கான தேவையிருந்தது. இத்தொகுப்பு அத்தேவையை நிறைவேற்றியுள்ளது.
கவிதை என்னும் வடிவம் உரைநடையின் “கஸின் பிரதர்” என்பது பேயோன் வாயிலிருந்து வருவதற்கே உரியதொரு கூற்றாகும். கவிதைக்குரிய நடையை அவரது கவிதைகளில் அரிதாகக் கண்டுவிட முடியும். கவிதையும் புனைவின் ஓர் உபவகை எனக் கூறும் இவர், உரைபுனைகளைப் போல் கவிதையிலும் குடும்பக் கவிதைகள், கிரைம், ஃபாண்டஸி, காதல் என வகையுருக்கள் (genre) இருக்க வேண்டும் என்று நம்புகிறார்.
சர்க்கரையைக் குறை என்றால்
ஒரேடியாகக் குறைத்துவிடுகிறாய்
என்ற வரிகளைக் கொண்ட ‘சாப்ளின் காபி’ எனும் கவிதை குடும்பக் கவிதை வகையுருவில் சேர்க்கப்பட வேண்டியது. வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை, ஊருக்குப் போ, குழந்தைகளின் சுயநலம் போன்றவையும் இவ்வகைப்பட்டவை.
‘போலீஸ் கேஸ்’-யை கிரைம் கவிதையாகவும் ‘ஃபேஸ்புக் கவிதை’யை சைபர் கிரைம் கவிதையாகவும் வகைப்படுத்தலாம். யங் அடல்ட் எனப்படும் வாசக இனத்தாருக்காகக் காதல் கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். கவிஞருக்கு இயற்கையுடன் உள்ள காதல்-வெறுப்பு உறவைப் பனுவும் ‘ஐந்து நிமிட மழைக்கு’ போன்ற கவிதைகளை சுற்றுச்சூழல் பிரிவுக்கு உட்படுத்தலாம். ‘துன்பத்தின் பிம்பம்’, ‘கேலிச் சித்திரம்’, ‘பிரதிபலித்தல்’ போன்ற உருப்படிகளைத் தத்துவத் துறை படைப்புகளாகக் கொள்ள முடியும். வகைப்படுத்தப்பட முடியாத ‘என் வாட்ச்சு கொஞ்சம் ஸ்லோ’ மாதிரியான கவிதைகளும் உள்ளன. இவற்றை மொட்டையாக ‘பேயோன் கவிதைகள்’ என்றுதான் சொல்லியாக வேண்டும்.
பேயோனின் கவிதை அணுகுமுறை எனக்கு உவப்பானது. “கை வைத்தால் கவிதை” என்று அவர் அடிக்கடி சொல்வார். கவிதை எளிமையாக இருக்க வேண்டும் என்பார். படிமங்களை அடுக்குதல், கவிதையைப் பல அடுக்குகளைக் கொண்டிருப்பதாக ஆக்குதல் அல்லது மாற்றுதல் போன்றவற்றில் உடன்பாடுகள் ஏதுமற்ற மனிதர் பேயோன். இவருக்குக் கவிதை நன்றாக வருகிறது. இவர் தொடர்ந்து எழுத வேண்டும்.
லார்டு லபக்குதாஸ்
சென்னை – ஜனவரி, 2013
வெளியீடு : http://FreeTamilEbooks.com

Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0  சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.

பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

புத்தக எண் – 16

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு

By With No comments:


soruகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
ஜோதிஜி  திருப்பூர்
மின்னஞ்சல் –powerjothig@yahoo.com
வகை – வரலாறு
வெளியீடு: த.ஸ்ரீனிவாசன்http://FreeTamilEbooks.com
மின்னூலாக்கம் – ஜோதிஜி  திருப்பூர், த. ஸ்ரீனிவாசன்
எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
நூலைப்பற்றி சில வார்த்தைகள்
அடுத்த பத்து தலைமுறைகளை அழிக்க காரணமாக இருந்த தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் என்ற ஊரில் இருந்து இதை கனத்த மனதோடு எழுதுகின்றேன். கடந்த 20 வருடங்களாக இங்குள்ள ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு இன்று உயர்ந்த பதவிக்கு வந்து இருந்த போதிலும் மனதிற்குள் இருக்கும் கோபமும், இயலாமையும் எழுத்தில் எழுத இயலாத அளவிற்கு கடந்து போய்விட்டது.
என்னளவில் உருவாக்கிக் கொண்ட சில கொள்கைகள் கோட்டுபாடுகளின் படி சுற்றுப்புறத்தை நாசம் செய்யாத நிறுவனங்களுடன் தொழில் ரீதியாக தொடர்பு வைத்துள்ளேன். அது போன்ற ஒரு நிறுவனத்தில் தான் தற்பொழுது “பொது மேலாளர்” என்ற பதவியில் இருக்கின்றேன். எனது முதல் புத்தகமாக வெளிவந்துள்ள “டாலர் நகரம்” என்ற நூலில் இங்குள்ள சாயப்பட்டறைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளேன். நான் கண்ட காட்சிகளை, பார்த்த பாதித்த அனுபவங்களை முடிந்தவரைக்கும் ஆவணப்படுத்தி உள்ளேன்.
தன் துறையில் இருக்கும் தரம் கெட்ட செயலை வேறு எவரும் துணிச்சலாக எழுத மாட்டார்கள் என்று இந்த புத்தகத்தை வாசித்த பலரும் எனக்கு பாராட்டுரை வழங்கினார்கள். 2013 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக விகடன் குழுமம் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர். இருந்த போதிலும் மனதிற்குள் இருக்கும் குற்ற உணர்ச்சியும், என் வாழ்வின் எதார்த்த கடமைகளும் இரண்டு தண்டவாளம் போல இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த மின் நூலிலும் நான் தமிழ்நாட்டில் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் மாசுபட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல வற்றையும், சந்தித்த அனுபவங்களையும் எழுதி உள்ளேன். என் குற்ற உணர்ச்சியையும், மனதில் உள்ள குறுகுறுப்பையும் இதன் மூலம் ஓரளவுக்கேனும் இறக்கி வைக்க விரும்புகின்றேன்.
இதுவரையிலும் மூன்று மின் நூல்கள் வெளியிட்டு உள்ளேன். இது எனது நான்காவது மின் நூலாகும். ஒவ்வொரு மின் நூலிலும் எனக்கு படங்கள் தந்து உதவிய “இயற்கை ஆர்வலர்” திரு. சங்கரநாராயணன் அவர்களுக்கு என் நன்றியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.
இதில் இரண்டாவது பகுதியாக வந்துள்ள மரபணு மாற்றம் குறித்த கட்டுரைகளை நச்சு ரசாயனத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் திரு செல்வம் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எனக்கு அறிமுகம் செய்து வைத்த சேலம் திரு. லெஷ்மணன் அவர்கள் என் நன்றி. திரு. நம்மாழ்வார் படம் தந்த பசுமை விகடனுக்கு மிக்க நன்றி.
“நிகழ்காலத்தில் உள்ள சாத்தியக்கூறுகளோடு நம்மை பொருத்திக் கொண்டு நாம் பிழைப்பதற்கான வழியை மட்டுமே எப்போதும் பார்த்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்” என்று என் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் உடன்பிறந்தோரும் எப்போதும் எனக்கு அறிவுரையாக சொல்வது வழக்கம்.
ஆனாலும் சமூகத்தில் மனிதர்கள் வாழும் சமரசத்துடன் கூடிய சாதாரண வாழ்க்கை என்ற எல்லைக் கோட்டை உடைத்தே இதுவரையிலும் வாழ்ந்து வந்துள்ளேன். இயற்கை போல எல்லைகளை கடந்த வாழ நினைத்த காரணத்தால் என் எழுத்துப் பயணத்தில் எல்லாத் துறைகளையும் நேர்மையோடு எழுத முடிந்தது. அரசியல், சமூகம், வரலாறு, அனுபவம் என்று கடந்த மூன்று மின் நூலிலும் என்னளவில் தெரிந்த வரையில் இயல்பான மொழியில் கொடுத்துள்ளேன்.
படித்த உங்களுக்கு என் நன்றி.
இயற்கை குறித்து அக்கறைப்படாமல் பணம் மட்டும் தான் வாழ்வின் குறி என்று வாழ்பவர்களை திருப்பூரில் தினந்தோறும் அதிக அளவில் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனக்கு எப்போதும் நினைவில் வந்து போவது நான் கீழே கொடுத்துள்ள படமே. ஆயிரம் பக்கங்கள் எழுதி புரிய வைக்க வேண்டிய விசயத்தை இந்த ஒரு படம் உங்களுக்கு புரிய வைத்து விடும். படிக்கத் தொடங்கும் உங்களுக்கு என் வாழ்த்துகளை எழுதி வைக்கின்றேன்.
image012
நன்றி.
ஜோதிஜி திருப்பூர்
தேவியர் இல்லம்.
27/03/2014
இங்கே கொடுத்துள்ள யூ டியூப் இணைப்பை சொடுக்கி இந்த பாடலை அவசியம் கேட்கவும்
தொடர்பு மின் அஞ்சல் powerjothig@yahoo.com
வலைபதிவு முகவரி http://deviyar-illam.blogspot.com/
பதிவிறக்க*ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
கிண்டில் கருவிகள், செயலிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
புத்தக எண் – 47

புலப்படா உலகில் புலப்பட்ட கீற்றுகள்

By With No comments:
saravanan-book-cover
சுவையான பல நிகழ்ச்சிகளாலும், சுவாரசியமான ஆளுமைகளாலும் நிரம்பிய வரலாற்று செய்திகளை, உரிய நாட்களில் பதிவிடுகிறார் பூ.கோ.சரவணன்.
அவரது வலைப்பதிவுhttp://saravananagathan.wordpress.com/இல் இருந்து ஒரு 100 செய்திகளை மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
தனது வலைப்பதிவை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிட்ட நூலாசிரியருக்கு நன்றிகள்.
ஆசிரியர் :  பூ.கோ.சரவணன்
உரிமை : கிரியேட்டிவ் காமன்ஸ்
மின்னூல் வெளியீடு :  http://FreeTamilEbooks.com
பதிவிறக்க*



புத்தக எண் – 10

தமிழர் தேசம்

By With No comments:


tamilar-desam_html_dfad2901 
நானும் எங்க ஊரும்
நான் பிறந்த ஊர் புதுவயல் என்றொரு கிராமம். தமிழ்நாட்டில் காரைக்குடி தாலூகாவில் உள்ளது. தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. பிறகு பசும்பொன் தேவர் திருமகனார் என்று பெயர் மாற்றம் பெற்றது. சாதிப் பெயர் கூடாது என்று பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என்று கூட மாறியது. அதுவே இன்று சிவகங்கை மாவட்டமாக மாறியுள்ளது. நான் காரைக்குடியில் உள்ள அழகப்பச் செட்டியார் கல்லூரியில் படித்து முடியும் வரையிலும் முதல் இருபது ஆண்டுகள் அங்கு தான் வாழ்ந்தேன். கடந்த இருபது ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்ந்து வருகின்றேன்.

நான் 1992ல் திருப்பூருக்குள் நுழையும் போது இந்தப்பகுதி கோவை மாவட்டத்தில் இருந்தது. தற்பொழுது திருப்பூர் தலைநகராகவும் அத்துடன் மாவட்டம் என்ற புதிய அந்தஸ்தும் பெற்றுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் நான் வளர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு ஊர்களுக்குப் பின்னால் நம்ப முடியாத மாற்றங்கள்.

மனிதர்களுக்குண்டான வரலாறு போல ஒவ்வொரு ஊருக்கும், மாவட்டத்திற்கும், குறிப்பிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுவராசியங்கள் உண்டு என்பதை நாம் வாழும் போது, வரலாற்றுப் புத்தகங்களை படிக்கும் போதும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

இதுவே நாடு குறித்து யோசிக்கும் பொழுதும், நம் தென் இந்திய வரலாறுகளைப் பற்றி படிக்கும் பொழுதும் இந்த மாற்றத்தில் தானே நம் முப்பாட்டன்களும், அவர்களின் முன்னோர்களும் வாழ்ந்து மறைந்திருப்பார்கள் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு.

நான் தற்பொழுது திருப்பூரில் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறையில் இருந்து வந்தாலும் ஓய்வு நேரங்களில் பலதரப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை படிக்கும் போது எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு அதிக ஆச்சரியங்களை தந்தது.

அதையே 2009 ஜுலை முதல் வலைபதிவு என்ற தமிழ் இணையம் எனக்கு அறிமுகமாக என்னைப் பற்றி, நான் சார்ந்திருக்கும் ஏற்றுமதி தொழிலையைப் பற்றி எழுதிக் கொண்டே வந்தேன்.
இதுவே என் முதல் புத்தகமாக “டாலர் நகரம்” என்ற பெயரில் வந்தது.

நம்முடைய முன்னோர்களான தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறுகளை படிக்கத் தொடங்கினேன். எண்ணிக்கையில் அடக்க முடியாத ஏராளமான வரலாற்றுப் புத்தகங்கள் நம்மிடையே இருந்தாலும் மாறிக் கொண்டே வரும் சூழலுக்கு ஏற்ப வாசிப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்ளாத அளவுக்கு எழுத்து நடையும், கடின மொழியாக்கமும் இருந்ததை உணர்ந்து கொண்டேன். காரணம் புத்தகத்தை எழுதியவர்களின் காலச்சூழலும், மாறிக் கொண்டே வரும் காலமும் வெவ்வேறு நிலையில் இருப்பதால் இன்றைய நிலையில் பழைய வரலாற்று நிகழ்வுகளைப்பற்றி வாசிக்க விரும்புவர்களுக்கு பழைய எழுத்தாளர்களின் எழுத்து நடை மிகுந்த சவாலாகவே உள்ளது.

இன்றைய சூழ்நிலையில் புத்தகங்களின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது. இணைய தளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வர வாசிப்பவர்களின் எண்ணமும், அவர்களின் நோக்கத்திலும் அதிகமான மாறுதல்களும் உருவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. நாள்தோறும் உருவாகிக் கொண்டு வரும் புதிய தொழில் நுட்ப வசதிகளும், விஞ்ஞான முன்னேற்றங்களும் வாசிப்பு பழக்கத்தில் அதிக தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே வருகின்றது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படத்துறை என்பது சாதாரண மனிதர்களுக்கு கனவு உலகம். எண்ணிப்பார்க்க முடியாத ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இன்று கையில் கொஞ்சம் காசிருந்தால் ஒரு குறும்படத்தை எடுத்து விட முடியும். யூ டியூப்பில் ஏற்றி உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்து விட முடியும். மாயத்திரையை வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான தொழில் நுட்பம் உடைத்து விட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் எழுதிய, எழுதிக் கொண்டிருந்த ஒவ்வொரு எழுத்தாளர்களும் தேவதூதன் போலவே பார்க்கப்பட்டார்கள். அவர்களைச் சுற்றிலும் ஒரு பெரிய ஒளிவட்டம் இருந்து கொண்டேயிருந்தது.

ஆனால் இன்று தமிழ் இணையதள வளர்ச்சியின் காரணமாக வாசகனுக்கும், எழுத்தாளர்களுக்குமிடையே உள்ள இடைவெளி குறைந்ததோடு ஏராளமான புதுப்புது எழுத்தாளர்களை நாள்தோறும் நவீன தொழில் நுட்பம் உருவாக்கிக் கொண்டே வருகின்றது.
கீச்சுக்கள் என்று சொல்லப்படும் ட்விட்டரில் எழுதப்படும் இரண்டு வரிகள் தொடங்கி முகநூல் என்றழைக்கப்படும் ஃபேஸ்புக்கில் எழுதப்படும் பத்து வரிகள் வரைக்கும் இன்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பலரும் எதிர்பார்க்கும் அங்கீகாரமும் எளிதில் கிடைத்து விடுகின்றது.

வாசகனின் ஆழ்ந்த உள்வாங்கலை இணைய தள வாசிப்பு நீர்த்துப் போக வைத்து விட்டது என்ற பழமையான குற்றச்சாட்டுக்கும், “எங்கள் சுதந்திரம் எங்களின் எண்ணங்கள்” என்றொரு புதிய தலைமுறை இளைஞர்கள் தங்களின் கற்பனைகளை நாள்தோறும் ஏதோவொரு வடிவத்தில் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.

செல்லும் இடங்களுக்கு புத்தகங்களை சுமந்து கொண்டு சென்று வாசித்தவர்களுக்கு இன்று எளிய கையடக்க கருவிகள் மூலம் நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேமித்து வாசிக்க அறிவியல் தொழில் நுட்பம் இன்று வசதிகளை தந்துள்ளது.
எதுவும் சுருக்கமாக, சுவராசியமாக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு ஆற அமர உட்கார்ந்து ஆராய்ந்து படிக்க நேரமிருப்பதில்லை. பொருளாதார கடமைகள் ஒரு பக்கம் துரத்த நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை நாம் விரும்பியபடி எவராது தருவாரா? என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த மின் நூல் உதவக்கூடும்.

நீங்கள் ஆராய்ச்சி மனப்பான்மையில் உள்ளவரா? இதில் கொடுத்துள்ள தகவல்களை வைத்துக் கொண்டு மேற்கொண்டு புத்தகங்களை தேடிப்படியுங்கள். இது முழுமையானது என்று நீங்கள் எண்ணிவிட வேண்டாம். உங்கள் முயற்சிகள் தான் உங்கள் ஆர்வத்தை முழுமைப்படுத்தும். இந்தப் புத்தகத்தை படியுங்கள் என்று எந்த இடத்திலும் நான் சிபாரிசு செய்யமாட்டேன்.

காரணம் எல்லாப்புத்தகங்களிலும் ஏதோவொரு விசயம் இருக்கத்தான் செய்யும்.  பயணம் தொடங்கினால் மட்டுமே பாதை தெரியும்.
ஒரு மாவட்டத்திற்குப் பின்னால் இத்தனை சுவராசியங்களா? என்று இந்த மின் நூலை வாசித்து முடித்ததும் உங்களுக்கு எண்ணம் உருவானால், ஆச்சரியப்பட்டால் உங்கள் நண்பர்களுக்கு இதனை அறிமுகம் செய்து வையுங்கள்.

என் நோக்கம் “தமிழர் தேசம்” என்றொரு பெரிய நூலை குறிப்பாக தொல்காப்பியம் தொடங்கி படிப்படியாக தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு என்றொரு மாநிலம் உருவானது வரைக்கும் எழுத வேண்டும் என்பதே.

ஆனால் அதற்காக உழைக்க வேண்டிய காலகட்டத்தை நினைத்தால் தற்பொழுது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் சாத்தியம் இல்லாதபோதும் கூட அதற்கான முன்னோட்டமாகத்தான் இதனை கருதிக் கொள்கின்றேன்.

இதனை மனதில் கொண்டே எளிமையாக சுருக்கமாக சுவராசியமாக சொல்ல முயற்சித்த போது 2000 வருடத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆவல் உருவானது. எனது தேவியர் இல்லம் வலைபதிவில் ஒவ்வொரு சமயத்திலும் எழுதிய தமிழர்களின் வரலாற்றை முதல் பகுதியில் தந்துள்ளேன்.

இதனைத் தொடர்ந்து நான் பிறந்த இராமநாதபுரம் மாவட்டம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு மாற்றம் பெற்றது என்பதை உணர்ந்து கொள்ளும் பொருட்டு பலதரப்பட்ட புத்தகங்கள் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அது நீண்டதாக போய்க் கொண்டே இருக்க நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை முழுமையாக நிறைவேற்ற முடியாத பட்சத்திலும் குறிப்பிடத்தக்க சம்பவங்களை, முக்கியமான நிகழ்வுகளை இரண்டாவது பகுதியில் தொகுத்துள்ளேன்.
மின் நூலுக்கு ஆதரவு கிடைக்குமா? என்ற அச்சம் போய்விட்டது.

காரணம் என்னுடைய முதல் மின் நூலான “ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” வெற்றி பெற்று அதனை நிரூபித்தது.
அதனைத் தொடந்தே “வெள்ளை அடிமைகள்” மின் நூல் உருவாக என்னை உழைக்க வைத்தது. இப்போது உங்கள் பார்வையில் என்னுடைய மூன்றாவது மின் நூல்.

தரவிறக்கம் செய்து ஆதரவளித்த அனைவருக்கும், இதற்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்த நண்பர் சீனிவாசன் மற்றும் அவரைச் சார்ந்த குழுவினருக்கும் என் நன்றியை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.

தமிழர் தேசம் மின் நூலுக்கு அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்த அவர்கள் உண்மைகள் தள நண்பருக்கு என் ப்ரியத்துடன் கூடிய நன்றிகள்.

நட்புடன்
ஜோதிஜி திருப்பூர்
தேவியர் இல்லம்,
28.02.2014

தொடர்பு கொள்ள powerjothig@yahoo.com
வலைபதிவு முகவரி http://deviyar-illam.blogspot.in
வெளியீடு : FreeTamilEbooks.com
மின்னூலாக்கம் – த.ஸ்ரீனிவாசன் tshrinivasan@gmail.com

License :  Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

புது கிண்டில் கருவிகளில் படிக்க

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க


Stay Connected..