புதையல் தீவு என்னும் இந்தக் கதை கோகுலம் சிறுவர் மாத இதழில் ஏப்ரல் 2004 முதல் மார்ச் 2005 வரை தொடராக வெளியானது.
சற்றும் திட்டமின்றி அந்தந்தக் கணத்துக் கற்பனைக்கு எழுத்து வடிவம் கொடுத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, இந்தக் கதையை அவ்வண்ணமே எழுதினேன். ஒரு கதாபாத்திரத்தைக் கூட யோசித்து வைத்துக்கொள்ளவில்லை. கதை என்ற ஒன்றைத் திட்டமிடவும் இல்லை. வாய்க்கு வந்தபடி கதை சொல்லுவதில் உள்ள சுகத்தை எழுத்தில் அனுபவித்துப் பார்க்க விரும்பி இக்கதையை எழுதினேன்.
வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியோடு செய்த மிகச் சில காரியங்களில் இது ஒன்று. என்னுடைய எழுத்துகளில் நான் மிகவும் விரும்பும் இரண்டாவது படைப்பு. (முதலாவது மொஸார்ட் குறித்த ஒரு சிறு நூல்.)
இந்தக் கதையை கோகுலத்தில் தொடராக வெளியிட்ட அதன் ஆசிரியர் சுஜாதாவுக்கு என் மனமார்ந்த நன்றி.
தம் வாழ்நாள் முழுதையும் சிறுவர் இலக்கியத்துக்காகவே செலவழித்தவர் அமரர் அழ வள்ளியப்பா. என்னால் எழுத முடியும் என்று சொல்லி, எழுத வைத்து, முதல் பிரசுர சாத்தியமும் செய்து தந்தவர் அவரே. கோகுலத்தில்தான் என் எழுத்து வாழ்க்கை ஆரம்பித்தது.
இந்தக் கதையை அந்த நல்ல மனிதரின் நினைவுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.
பா.ராகவன்.
—-
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
0 comments:
Post a Comment